13891 உலக மாமேதை ஜி.ஜி.

எஸ்.எஸ்.தியாகராஜா. அளவெட்டி: எஸ்.எஸ்.தியாகராஜா, ராஜபவனம், அளவெட்டி வடக்கு, 1வது பதிப்பு, 2017. (சங்கானை: Twinstar IT Unit, பிரதான வீதி).

xxxv, (8), 198 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-43908-0-5.

ஜீ.ஜீ. பொன்னம்பலம்  துணிச்சல், பேச்சாற்றல் மிக்க ஒரு ஆளுமை. தன் கம்பீரமான குரலாலும் நாவன்மையாலும் சட்ட மன்றுகளில் ஆங்கில தேசாதிபதிகளையும் சிங்களத் தலைவர்களையும் மௌனமாக்கியவர். இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திராத, அறிந்திராத பல விடயங்களுடன் இந்நூல் ஜீ.ஜீ.யின் அரசியல், சட்டத்துறை வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டுள்ளது. உலக மாமேதை ஜீ.ஜீ. பொன்னம்பலம், இளமையும் கல்வியும், சட்டமும் அரசியலும், ஜீ.ஜீ., இந்திய வம்சாவளி மக்களுக்காக பாடுபட்டவர் ஜீ.ஜீ., அரசியல் நிபுணர், ஈழத்தின் பிரதமர் ஜீ.ஜீ., மந்திரி பொன்னம்பலம் மங்காத சுடரொளி, தமிழ்ப் பகுதியை பொருளாதாரத்தில் உயர்த்திய மாமன்னன், உலக மாமேதை ஜீ.ஜீ.க்கு உலக நாடுகளின் புகழ், அஞ்சாநெஞ்சம் படைத்த தலைவன் ஜீ.ஜீ., ஜீ.ஜீ.யின் சரித்திரப் பிரசித்திபெற்ற பேச்சும் பிறவும், உலகப் பகழ்பெற்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகிய 13 தலைப்புகளின்கீழ், அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் பல்வேறு பரிமாணங்களையும் இலகு தமிழில், அழகிய நடையில் புகைப்படங்கள் சகிதம் ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.தியாகராஜா அவர்கள் படைத்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61916).

ஏனைய பதிவுகள்

a hundred Totally free Spins

Blogs In which Do i need to Have the Most recent a hundred Free Spins No deposit Extra Requirements? Tips Allege Your Free Revolves Added