13892 காலத்தை வென்றவன் காவியமானவன்.

மர்யம் மன்சூர் நளிமுதீன். கல்முனை: மர்யம் மன்சூர் நளிமுதீன், 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

25.07.2017 இல் தனது 84ஆவது அகவையில் இறையடி எய்திய முன்னாள் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சரும், குவைத், பஹ்ரைன் நாடுகளுக்கான இலங்கை தூதுவருமான கலாநிதி மர்ஹ{ம் ஏ.ஆர்.மன்சூர் (சட்டத்தரணி) அவர்களின் மறைவையொட்டி மக்கள் தம் கண்ணீர் துளிகளினால் அர்ப்பணித்த கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். கடந்த 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி ஏ.ஆர்.மன்சூர், 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்தார். நல்லதோர் அரசியல் பரம்பரையின் பின்புலத்தில் வாழ்ந்த, மர்ஹ_ம் மன்சூர் முஸ்லிம் சமூக அரசியலுக்கு முன்னோடியாக விளங்கியவர். கல்முனை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹ_ம் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான இவர் அரசியலில் பல்வேறு பரிமாணங்களை வகித்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்ட அமைச்சராக, வெளிநாட்டுத் தூதுவராக பணிபுரிந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றியவர். சட்டத்தரணியான இவர், ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் சிறந்த பேச்சாற்றல் உடையவராகவும் விளங்கினார். அமரர் பிரேமதாசாவின் காலத்தில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த போது, புனித ரமழான் காலத்தில் அரபு நாடுகளிலிருந்து பேரீச்சம் பழங்களை பெற்று பகிர்ந்தளிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். மர் ஹூம் அஷ்ரபின் இறுதிக் காலத்தில், அஷ்ரபின் சமூக மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கினார். தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்கு பெரும் பாலமாக விளங்கிய இவர், கல்முனை மாநகர அபிவிருத்தியில் பெரும்பங்காற்றினார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62116).

ஏனைய பதிவுகள்

Free online Black-jack

Content How to Play Black-jack And its particular Card Online game Laws Multiplayer Cards Play Free Black-jack Video game To own Cell phones Regarding the