13896 ஒரு தொண்டரின் பாதை: சமூகத்தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் வாழ்வும் பணிகளும்.

என்.செல்வராஜா. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னெப்பெட்டல், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 284 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14.5 சமீ.

வட இலங்கை சர்வோதய அறங்காவலரும், தமிழ்கூறும் நல்லுலகினால் நன்கு அறியப்பட்டவரும், வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் உழைத்தவருமான அமரர் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் வாழ்வும் பணிகளும் தொடர்பாக எழுதப்பட்ட நூல். சமூகத்தின் உயர்வே தனது லட்சியம் என சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டி, நிகழ்காலத்தவர் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரும் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் வாழ்ந்த பெருமகன் தான் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு அவர்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்து தவிர்க்க முடியாத நிலையில் இடைத்தரக் கல்வியோடு தனது பள்ளிக் கல்வியை நிறுத்தி சமூகப் பணியை மேற்கொள்ளப் புறப்பட்டவர் தொண்டர் திருநாவுக்கரசு அவர்கள். சமூகப் பணியில் ஆர்வம் கொண்டிருந்ததன் காரணமாக கிராமத்து இளைஞர்களை ஒன்றிணைத்து தான் பிறந்து வளர்ந்த புங்குடுதீவுக் கிராமத்தைக் களமாகக் கொண்டு தனது பதின்ம வயதில் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக இளைஞர் அமைப்புகள், கிராமசபை போன்றவற்றினூடாகச் செயற்பட ஆரம்பித்தவர். வட இலங்கை சர்வோதயம் என்ற அரசுசார்பற்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமைச் செயலகத்தினை புங்குடுதீவில் அமைத்து வடமாகாணத்தைச் சேவைப்பரப்பாகக் கொண்டு பணிசெய்தவர். இந்நூல் என்கடன் பணி செய்து கிடப்பதே, நிறைமொழி மாந்தர் பெருமை, தமிழரின் அரசியல் வரவேற்கிறது, கிராமசபையில் நான்கு ஆண்டுகள், தொண்டர் திருவின் சமூகப்பணிகள், புங்குடுதீவில் சர்வோதய இயக்கம், திருநா அண்ணரும் சர்வோதய இயக்கமும், முரண்பாடுகளின் அறுவடை, திருநா அண்ணரின் விவசாயப் பணிகள், திருநா அண்ணரின் சுகாதாரப் பணிகள், திருநா அண்ணரின் கலை கலாச்சாரப் பணிகள், திருநா அண்ணருடனான எனது  ஊடகஃநூலக அனுபவம், திருநா அண்ணரின் ஆன்மீக ஈடுபாடு, கனவுகளைக் கலைத்த இடப்பெயர்வுகள், திருநா அண்ணரின் இறுதிப்பயணம், அண்ணர் உருவாக்கிய பாதையில் தொடரும் பயணம் ஆகிய 16 இயல்களில் இந்நூல் விரிகின்றது. பின்னிணைப்புகளாக, இறுதிக் கடிதம்: புங்குடுதீவில் அவசர வேலையும் நிர்மாணப் பணிகளும், அமரர் க.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் கோட்பாடு, அமரர் கந்தையா திருநாவுக்கரசு பற்றிய தகவல் அடங்கியுள்ள பிற நூல்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Fsnd and Jack Mobile Casinos Unify

Articles Exactly what Casino games Can i Have fun with A gambling establishment App? Latest Americas Cardroom Promo Password Offers And you may Extra Advertisements

DISASTER Arena Spil Online Gratis!

Content Nordic Bet login casino | Parken og Pena-paladset pr. Sintra, Sintra: Hop-på-hop-af-bussen til slotte Fra 1998 Elementor sammendrag Et periode (eller autopsi) er endelig