13899 வாழ்வகம்: அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவுச் சிறப்பு மலர் 2008.

ஆ.ரவீந்திரன் (பிரதம ஆசிரியர்), க.தர்மசேகரம், சு.ஸ்ரீகுமரன் (துணை ஆசிரியர்கள்). சுன்னாகம்: வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

viii, 75 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

வாழ்வகத்தின் நிறுவுநரும், முன்னைநாள் தலைவரும், விழிப்புலனற்றோரின் கல்வி வரலாற்றில் விபரிக்கமுடியாத அரும்பணிகளைத் தனிமனிதராக நின்று தொடக்கிவைத்து,  வாழ்வகம் என்ற பெருவிருட்சமாக அதனை வளர்த்துவிட்ட அமரர் அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய நினைவுப் பதிகைகளாக இதிலுள்ள ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மலரின் சிறப்புக் கட்டுரைகள் விசேட தேவைக்குரிய மாணவர்களின் கல்வி, வாழ்வியல்புகள் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டிருப்பது சிறப்புக்குரிய விடயமாகும். அன்னை அன்னலட்சுமி அவர்கள் மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விழிப்புலன் அற்றவர்களை தனிமனித முயற்சியாகத் தொடங்கி, உயர்கல்வி பெறச்செய்து திறன்மிக்க மாந்தர்களாக உருவாக்கிவிட்ட பெருமை இவரைச் சாரும். சமூகத்தாலும், குடும்பத்தாலும் விழிப்புலனற்றவர்களாக ஒதுக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடிக் கண்டெடுத்துத் தான் உருவாக்கிய வாழ்வகத்தில் வைத்துப் பராமரித்து அவர்களுக்குரிய சிறப்புக் கல்வியை வழங்கி ஆளாக்கியவர் இவர். கல்வி என்பது  ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை என்பதை நன்குணர்ந்து, பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்கின்ற விழிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கு ஏற்ற கல்வி ஒழுங்குகள் அனைத்தும் கிடைக்கச்செய்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த இவரது வாழ்வும் பணிகளும் இம்மலரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அம்மையாரவர்கள் 11.09.2006இல் அமரத்துவமடைந்தார்.

ஏனைய பதிவுகள்

15630 ஈழத்தில் கிடைக்கப்பெறும் ஆதிபழைய விலாச நாடகம்: தால விலாசம்.

ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 112 பக்கம், விலை:

17700 மாசுறு பேறு: சிறுகதைகள்.

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 650., அளவு: