13912 ஆ.தேவராசன்: ஆ.தேவராசன் Q.S.M அவர்களின் நினைவின் சில பதிவுகள்.

எஸ்.எம்.வரதராஜன் (பதிப்பாசிரியர்). நியூசிலாந்து: நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், தபால் பெட்டி எண் 6428, வெல்லெஸ்சி வீதி, ஓக்லாந்து, 1வது பதிப்பு, ஜுலை 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

தமிழுக்காற்றிய சேவைக்காக நியூசிலாந்து அரசின் Queen’s Service Medal விருதினைப் பெற்ற அமரர் ஆ.தேவராசனின்  நினைவாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலர் இது. அவர் தமிழ் மீது கொண்ட பற்றுறுதியையும் ஆத்மார்த்தமான ஈடுபாடுகளையும் பகிர்ந்துகொள்ளும் பல்வேறு பிரமுகர்களின் அஞ்சலி உரைகளுடன் இம்மலர் வெளிவந்துள்ளது. நாடுகடந்த தமிழீழஅரசு உருவாக்கப்பட்டபோது நியூசிலாந்தின் பிரதிநிதியாக முதன்முதலாகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர். முன்னுரை/தமிழ்ச்சங்கத் தலைவரின் உள்ளத்திலிருந்து/பதிப்புரை/நினைவில் தேவராசன்/தேவராசனுக்குச் சமர்ப்பணமாக/ ஈழத்துத் தமிழர் வரலாற்றிற்கு புதுவெளிச்சமூட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வு/ இலங்காபுரியும் இலங்காபுரமும்/ பண்டைய ஈழத்தில் முருக வழிபாடு/ தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்/ கவிதை ஆகிய அவர் பற்றிய பதிவுகளுடன் அமரர் ஆ.தேவராசா அவர்களின் கட்டுரைகள் சிலவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. புதிய கண்ணோட்டத்தில் தமிழாராய்ச்சி/ தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நூலில் அமரர் எழுதிய முன்னுரை/ நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (இலங்கை) சில சிந்தனைகள்/ பிராமி எழுத்துக்கள்-ஒரு வரலாற்று நோக்கு/ ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளும் தமிழர்களும்/ இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தஞ்சை மாநாடு/ வல்லிபுரத் தாழிக்காடு/ Tamil as Official Language Chapter 1&2/ நாவலரின் சமூகப்பணி/ நாவலருக்குப் பின் நாவலராக வாழ்ந்து காட்டியவர்-கதிரைவேற்பிள்ளையின் காலமும் பணியும்/ நாவலர் செய்த தொல்பொருள் ஆராய்ச்சி/ நாவலர் பல்கலைக்கழகமே சிறந்தது/ முதன்முதலில் சந்தித்தேன்/ கைலாசபதியின் காத்திரமான பங்களிப்பு/ஏறு தழுவுதலும் ஏந்திழையின் ஏக்கமும்/என்ன இந்த நடனம்? எதற்கு இந்த ஆட்டம்?/தமிழ்நெற் கட்டுரைகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62914).

ஏனைய பதிவுகள்

8058 உன்னை நீ முந்து: வாழ்வியல் வசந்தங்கள் 14.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 152 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

Enjoy Golden Goddess Slot by IGT

Second, you should use the new Along with and you will Without buttons to modify your own wager. Online slots games are entirely reliant on