தாரணி ஆரூரன். புதுச்சேரி 605004: தமிழர் இனவரைவியல் கழகம், மனை எண் 33, முதல் முதன்மைச் சாலை, வசந்த நகர், தேங்காய்த் திட்டு, 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
(8), 132 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 390., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-97102-4-0.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த பேராசிரியர் சண்முகலிங்கனின் வாழ்வியல் படைப்பாக்கச் சாதனைகளை, அவரது வாழ்வனுபவங்கள் படைப்பனுபவங்களாக உயிர்பெறும் தருணங்களை இந்நூல் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது. ஆழமான நேர்காணல்கள், படைப்புகளின் உள்ளடக்கப் பகுப்பாய்வுகளின் வழியாக பேராசிரியரின் ஆளுமை முழுமையை மதிப்பிட்டு வெளிக்கொணர்கின்றது. சமூகவியல் புலமையாளரான பேராசிரியர், இயல்-இசை-நாடகம் எனும் முத்தமிழ் வல்லாளர். அனைத்துலக ஆய்வு அமைப்பான தமிழர் இனவரைவியல் கழகத்தின் கௌரவத் தலைவர்.