மூ.சிவலிங்கம், அருளையா பேரின்பநாயகம், கந்தையா ஸ்ரீகணேசன் (மலர்க்குழு). யாழ்ப்பாணம்: இன்பம் அருளையா, இணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்றாண்டு நினைவுக் குழு, காரைக்கால் சிவன்கோவில் வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xxiv, 128 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 700., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-705-182-6.
தியாகர் இயல், அணியியல் ஆகிய இரண்டு இயல்களில் இச்சிறப்புமலர் ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. தியாகர் இயலில் சுவாமிகளின் வரலாறு (மூ.சிவலிங்கம்), எனது சிந்தையுள் சிலையாகச் செதுக்கப்பட்டுள்ள பெரியையாவும் பெரியம்மாவும் (இன்பம் அருளையா), சமாதி நிலையில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் (கு.சண்முகநாதன்), சித்தர் கலை மரபும் தியாகராஜ சுவாமிகளும்(சபா. ஜெயராசா), பக்தராகவும் சித்தராகவும் வாழ்ந்தவர் தியாகராஜ சுவாமிகள் (வல்லிபுரம் மகேஸ்வரன்), இணுவையூர்ப் பஜனைப் பாவலர் திருப்புகழ் தியாகராஜ சுவாமிகள் (கந்தையா ஸ்ரீகணேசன்), மிகவுயர்ந்த மகா வாக்கியத்தின் ஆத்மவியக்கத்தைத் தந்தருளிய ஸ்ரீமத். தியாகராஜ சுவாமிகள் (முருகேசு கௌரிகாந்தன்), இணுவையூர் திருப்புகழ் தியாகராஜ சுவாமிகள் தொடர்பாக என் மனப்பதிவில் சில (புவனலோஜனி ஜீவானந்தம்), இணுவில் திருப்புகழ்மணி தியாகராஜ சுவாமிகள் (சு.செல்லத்துரை), நயினை மறவாத தியாகராஜ சுவாமிகள் (நாகமணி கோபாலகிருஷ்ணன்), திக்கெட்டும் திருப்புகழால் வாழ்வித்து திருநீற்றால் தீராத நோய்களைக் குணமாக்கிய தீர்க்கதரிசி இணுவிலூர் தியாகராஜ சுவாமிகள் (கே.எஸ்.சிவஞானராஜா), இசைத்தமிழுக்கு உயிரோட்டம் கொடுத்த இணுவில் தியாகராஜ சுவாமிகள் (சிவ.மகாலிங்கம்), ஞான பரம்பரையினூடாக இணுவிற் சமயநிலையும் தியாகராஜ சுவாமிகளும் (கார்த்தியாயினி கதிர்காமநாதன்), திருப்புகழ் திலகம் தியாகராஜ சுவாமிகள் (நா.குலசிங்கம்), சுவாமிகளின் பாதம் வணங்குகின்றேன் (குருவடிமை யோகர்), இணுவில் மகான் தியாகராஜ சுவாமிகள் திருப்புகழ் (இராசையா சம்பந்தன்), திருப்புகழ் திலகம் தியாகராஜ சுவாமிகளின் 100ஆவது பிறந்ததின நினைவோடு (பரராஜசேகரம் நிர்மலாதேவி), தெய்வீக இசைபாடும் பெரியையாவின் தேர்த்திருப்பணி (அமிர்தேஸ்வரி சிதம்பரநாதன்), என் குருநாதர் (பேர்த்தி ரூபி), எனது குடும்பமும் குருநாதரும் (வினோ), குருவே துணை (கௌரிமனோகரி பாஸ்கரன்), தியாகராஜ சுவாமிகள் நூற்றாண்டு விழாப் பாடல் (இன்பம் அருளையா), சிதம்பர வளவு ஞானவைரவர் மீதான பஜனைப் பாடல் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது இயலான அணியியலில், கல்வியிற் காலூன்றி நிற்கும் இணுவையம்பதி (ஆதிலட்சுமி சிவகுமார்), இணுவையூர் சின்னத்தம்பிப் புலவர் பஞ்சவன்னத் தூது (கார்த்தியாயினி கதிர்காமநாதன்), மெய்கண்ட சாஸ்திர நூல்களில் சைவசித்தாந்தம் (சிவ.மகாலிங்கம்), பண்ணிசையும் துர்க்காபுரம் மகளிர் இல்லமும் (செல்வதியம்மா பூலோகம்), பஜனை பாடி மகிழ்வோம் பயன் பல பெறுவோம் (சி.காயத்ரீ) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.