13920 வில்லிசைப் புலவர் சின்னமணியின் மணிவிழா மலர் 1997.

கார்த்திகேசு நடராசன் (மணிவிழா மலர் ஆசிரியர்). கொழும்பு 6: மணிவிழாக் குழு, சிந்துசாது சினிவிஷன், 381, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், ஹொட்டேல் சிலோன் இன்ஸ், 501/2, காலி வீதி, வெள்ளவத்தை).

(120) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17 சமீ.

சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (30.03.1936 – 04.02.2015), யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசைக் கலைகளில் சிறந்து விளங்கியவர். 1954 ஆம் ஆண்டுகளில் இரத்மலானை, கொத்தலாவலை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். பின்னாளில் இவர் அச்சுவேலியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அவரது மணிவிழா ஞாபகார்த்தமாக 05.10.1997 அன்றுவெளியிடப்பெற்றுள்ள இம்மலரில் பல்வேறு பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளுடன், கால ஓட்டத்தில் கலாவிநோதன் (கார். நடராசன்), அறுபதாம் வயதில் அரசோச்சும் கலைஞன் (நவாலியூர் நா.சச்சிதானந்தன்), கடல் கடந்த கலைப் பயணம் (கலைஞர் எஸ்.ரி.அரசு), மணி விழாக்காணும் சின்னமணி (பெ. சூரியமூர்த்தி), இவர் ஒரு பல்கலை வேந்தன் (செல்வத்துரை குணபாலசிங்கம்), வில்லிசையில் விழிப்புணர்ச்சி (ந.குமுதா), ஈழத்து வில்லிசையில் என் பங்கு (வில்லிசைப் புலவர் சின்னமணி)ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இம்மணிவிழா மலர்க் குழுவில் வி.எஸ்.மகேந்திரன், ஆ.திருஞானம், கே.பி.நடனசிகாமணி, வி.எஸ்.மதியழகன், லயன் கா.ரி.ரவீந்திரநாதன், மா.புவியழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24684).

ஏனைய பதிவுகள்