13926 ஒளிவளர் தீபங்கள்: வலி.கிழக்குப் பிரதேசத்தின் மறைந்த இலக்கிய உறவுகளின் வாழ்க்கைக் குறிப்புகள்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆடி 2016. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

vi, 103  பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-48-0.

இந்நூலில் ஈழத்து இலக்கியவாதியான யோகேஸ்வரி அவர்கள், வலி கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த ஐம்பத்தைந்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களைத் தொகுத்திருக்கிறார். அச்சுவேலி நமச்சிவாயப் புலவர், வைத்தியநாதச் செய்யடியார், வி.இன்னாசித்தம்பி, நீ.காசிநாதப் புலவர், மு.கதிரேசுப் புலவர், ச.தம்பிமுத்துப் புலவர், வேன்மயல்வாகனப் புலவர், திக்கம் சி.செல்லையாப்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சிவஸ்ரீ ச.குமாரசாமிக் குருக்கள், சு.இராமசாமி, பாவலர் தம்பிமுத்து, சி.செல்லத்துரை, பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம், ந.ஞானசுந்தரம், ந.சிவபாதம், பேராசிரியர் க.கைலாசபதி, ஆவரங்கால் நமசிவாயப்புலவர், ச.சுப்பிரமணியம், க.சொக்கலிங்கம், த.நாகமுத்து, இருபாலைச் செட்டியார், நெல்லைநாத முதலியார், சேனாதிராய முதலியார், ஆபிரஹாம், க.வேலுப்பிள்ளை, அ.பஞ்சாட்சரம், அருண் விஜயராணி, ஊரெழு சு.சரவணமுத்துப்பிள்ளை, வே.இராமலிங்கம், வி.வேலுப்பிள்ளை, கோப்பாய் அ.அம்பலவாண பண்டிதர், சபாபதி நாவலர், ச.கந்தையபிள்ளை, சிவஸ்ரீ சோ.சுப்பிரமணியக் குருக்கள், அ.வி.மயில்வாகனன், க.இ.குமாரசாமி, பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சர சர்மா, வ.இராசையா, க.இ.சரவணமுத்து, பிரம்மஸ்ரீ வை.மு.பரமசுவாமிக் குருக்கள், இ.மகேஸ்வர சர்மா,சி.வை.தாமோதரம்பிள்ளை, சி.வை.சின்னப்பபிள்ளை, சிதம்பரநாதப் புலவர், முத்துக்குமார ஆச்சாரிய சுவாமிகள், பீதாம்பரப் புலவர், நீர்வேலி சிவசங்கரப்புலவர், சி.சிவப்பிரகாச பண்டிதர், சி.சிவகுருநாதபிள்ளை, கு.சிற்சபேசன், நீ.சி.முருகேசு, செ.துரைசிங்கம், திருமதி சத்தியதேவி துரைசிங்கம், கலாநிதி சி.முருகையன் ஆகியோர் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61504).

ஏனைய பதிவுகள்