சு.ஸ்ரீகுமரன் (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: பாமா வெளியீடு, 118, ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சுன்னாகம்: விக்னேஸ் பிரின்டர்ஸ்).
vi, 7-36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
கலாபூஷணம் சு.துரைசிங்கம்-பட்டம்மாள் தம்பதியினரின் திருமணப் பொன்விழா வெளியீடாக 29.09.2018 அன்று வெளியிடப்பட்ட இந்நூலின் தொகுப்பாசிரியர் இயல்வாணன் (சு.ஸ்ரீகுமரன்) வலிகாமம் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள் பற்றிய ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ந.சி.கந்தையாபிள்ளையின் வாழ்வும் பணியும் (திருமதி ஜெகதீஸ்வரி சற்குணநாதன்), தமிழ் அகராதிகள் ஆக்கத்தில் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் பங்களிப்பு (சு.துரைசிங்கம்), ந.சி.கவும் நூல்களும் தமிழ் வல்லோர் கருத்துக்களும் (ஈழத்துச் சாரதி), ந.சி.கந்தையாபிள்ளையின் அறிவியல் பார்வை (சு.ஸ்ரீகுமரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.