13929 கம்பதாசன் வாழ்வும் பணியும்.

சிலோன் விஜயேந்திரன் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிவாசகர் நூலகம், 5, சிங்காரவேலு தெரு, தி.நகர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (சென்னை 600 021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்).

160 பக்கம், தகடுகள், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ.

தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் திண்டிவனம் பகுதியில் உள்ள உலகாபுரம் கிராமத்தில் பிறந்த அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் கம்பதாசன் (15.9.1916-23.5.1973) என்ற பெருங் கவிஞனை தமிழகமே மறந்துவிட்ட நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது மகத்தான கவித்திறனையும் காவியப் புலமையையும் முதன்முதலாக முழுமையாக அடையாளப்படுத்திய பெருமை ஈழத்தவரான கவிஞர் சிலோன் விஜயேந்திரனுக்கேயுரியது. சிலோன் விஜயேந்திரனால் ‘கவிஞர் கம்பதாசன்: வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் (நூல்தேட்டம் பதிவிலக்கம் 9915) இந்நூல் முன்னதாக 1986இல் சென்னை அல்லயன்ஸ் கம்பெனியினரால் வெளியிடப்பட்டிருந்தது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31284).

ஏனைய பதிவுகள்

On line Roulette Real cash

Articles Flaming fox casinos – How to pick Gambling enterprise The real deal Profit Canada? Finest Info Away from Benefits! Blackjack Household Edge I make