13933 செவாலியர் இளவாலை அமுது: சிவ.தணிகாசலம்- இலக்கிய சங்கமம்.

சிவசம்பு தணிகாசலம். லண்டன்: இலண்டன் இலக்கிய சங்கமம், இல. 1, Devon Close, Perivale, Middlesex UB6 7DN,1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

lxii, 302 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

தொண்ணூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அமரத்துவம் எய்தியவர். புலவர்மணி இளமுருகனார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, வித்துவான் வேந்தனார், பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது. அவர் லண்டனில் வாழ்ந்த வேளையில் இலண்டன் இலக்கிய சங்கமம் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தவர். அவ்வமைப்பின் அமைப்பாளராகவிருந்த சிவ சம்பு தணிகாசலம் அவர்கள் அமுதுப் புலவருடனான தனது உறவை, அவ்விலக்கிய உறவின் மலரும் நினைவுகளை இந்நூலில் புகைப்பட உதவியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அமுதுப்புலவருடன் மாத்திரம் நின்றுவிடாது, தான் சந்தித்த பிற பிரமுகர்கள் பற்றியும் பதிவுசெய்யத் தவறவில்லை.

ஏனைய பதிவுகள்

15968 ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்கள்.

 சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. சமூக விஞ்ஞான