நெடுந்தீவு: கவிமணி க.த.ஞானப்பிரகாசம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2016. யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
x, 110 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-43475-0-2.
கவிமணி க.த.ஞானப்பிரகாசம் (மறைவு: 16.08.2006) யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அதிபராக பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படத்தக்கன. தமது கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கன. இச்சிறப்பிதழில் கவிஞர் பற்றிய ஒரு கண்ணோட்டம், கவிஞரது கவிக்கடவில் விளைந்த முத்துக்கள், வாழ்த்து மடல்கள், கண்ணீர்க் காவியம், தனிப் பாடல்கள், பாராட்டுரைகள் என்பன இடம்பெற்றுள்ளன.