மலர்க் குழு. கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்/இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், 9,2/1, நெல்சன் இடம், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
312 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 26×19 சமீ.
இலக்கியம் மக்களுக்காக என்ற கொள்கைப் பற்றுறுதியுடன் கடந்த 45 ஆண்டுகளாக எழுதிவரும் எழுத்தாளர் தம்புசிவா ஈழத்தின் இலக்கியப் பரப்பில் தனித்துவமிக்க ஒருவராகத் திகழ்கின்றார். சிறுகதை, கட்டுரை, கவிதை, பத்தி, திறனாய்வு என்று பல்துறைச் சார்ந்த இலக்கியப் பங்களிப்பை வழங்கிவரும் இவர் தம்மை ஒரு பத்திரிகையாளராகவும், சஞ்சிகையாளராகவும் முன்னிலைப்படுத்தி நிற்கின்றார். 1970 ஆம் ஆண்டு ‘கற்பகம்’ என்ற இலக்கியச் சஞ்சிகை மூலம் எழுத்துலகில் கால்பதித்த தம்பு சிவா அன்று தொடக்கம் இன்றுவரை தமது எழுத்துப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரது பவளவிழா நினைவாக 24.02.2019 அன்று வெளியான இம்மலரின் முதலாவது இதழில் பவளவிழா வாழ்த்துக்களும், இரண்டாவது இதழில் தமிழ்த் தென்றல் தம்புசிவாவின் ஆக்கங்களும், மூன்றாவது இதழில் திருமதி ராதா சிவசுப்பிரமணியத்தின் ஆக்கங்களும், நான்காவது இதழில் மாதுமை சிவசுப்பிரமணியத்தின் ஆக்கங்களும், இடம்பெற்றுள்ளன. இறுதியாகவுள்ள ஐந்தாவது இதழில், தம்பு சிவாவின் விருதுகளும் சான்றிதழ்களும் இணைக்கப்பெற்றுள்ளன. பவளவிழா மலர்க் குழுவில் வவுனியூர் இரா உதயணன், வே.பிரேமகுமார், வே.பிரேமச்சந்திரன், வே.பிரேமரஞ்சன், சி.மாதுமை, ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.