சீனித்தம்பி ஆறுமுகம் குடும்பத்தினர். கனடா: அமரர் சீனித்தம்பி ஆறுமுகம் குடும்பத்தினர், ரொறன்ரோ, 1வது பதிப்பு, மே 2018. (கனடா: பைன் பிரின்ட், ரொரன்றொ).
(2), 67 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ.
ஆரையம்பதி நவம் என அறியப்பெற்றவரும், நீலவேணி, குமரி முதல் சென்னை வரை, அழகு சுடும், நந்தாவதி, வாரிசுகள் ஆகிய நூல்களின் ஆசிரியருமான சீனித்தம்பி ஆறுமுகம் (நவம்) அவர்கள் இலங்கையில் பயிற்றப்பட்ட தமிழசிரியராக இரத்தினபுரி, கொழும்பு, கிரான், கல்லடி, ஆரையம்பதி, கிரான்குளம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். பின்னர் புலம்பெயர்ந்து 1990 முதல் 2012 வரை தமிழ்நாட்டிலும் பின்னர் 2013 முதல் 2015 வரை கனடாவிலும்; வாழ்ந்தவர். 2015இல் மீண்டும் தன் பிறந்த மண்ணான ஆரையம்பதிக்கு வந்து மரணிக்கும் வரையில் அம்மண்ணிலேயே வாழ்ந்தவர். கனடா, ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபத்தில் 06.05.2018 அன்று ஒழுங்குசெய்யப்பட்ட அவரது மறைவின் முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வின்போது அமரர் நவத்தின் குடும்பத்தினரதும் தமிழறிஞர்கள் பலரினதும் நினைவஞ்சலிக் கட்டுரைகளுடன் இம்மலர் அவரது குடும்பத்தினரால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.