பாமதி மயூரநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், இணுவில், 1வது பதிப்பு, மார்ச் 2018. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xxii, 300 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-705-182-6.
இணுவையூர் பண்டிதர், வித்துவான், சைவப்புலவர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் அமரர் இராமுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் யாத்த நூல்களின் தொகுப்பும் அவர் பற்றிய எண்ணப் பகிர்வுகளும் அவரது மகள் பாமதியின் மூலம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பண்டிதர் இ.திருநாவுக்கரசு அவர்கள் பற்றிய எண்ணப் பகிர்வுகள், பண்டிதர் இ.திருநாவுக்கரசு அவர்களின் மறைவையொட்டி 1996இல் வெளியிடப்பெற்ற நினைவு மலரிலிருந்து தேர்ந்த பகுதிகள், பண்டிதர் அவர்களின் ஆக்கங்களும் நூல்களின் தொகுப்பும் (என்னினும் இனியான் ஒருவன் உளன், தோன்றாத் துணைவன், எட்டுக்குடி வேலவர் ஏசல், இணுவில் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபைத் தேர்தல் கூட்டப் பத்திரிகை, ஸ்ரீ கல்யாண வேலவர் திருவூசல், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருத்தோத்திரப் பத்தும் ஸ்ரீ செகராஜசேகரப் பிள்ளையார் திருவூஞ்சற் பதிகமும், நவராத்திரி பூஜை, இணுவையந்தாதி, குமாரபுர வெண்பாவும் திருவூஞ்சற் பதிகமும், இராமுப்பிள்ளை பத்தினிப்பிள்ளை நினைவு மலர், இணுவை முருகன் பிள்ளைத் தமிழுக்கு வழங்கிய சாற்றுக்கவி, கவியரங்கு, கவியரங்கம்) என்பன இந்நூலின் பிரதான அம்சங்களாகும். பின்னிணைப்புகளாக அப்பெரியார் ஆற்றிய திருப்பணிகள், சமூகப்பணிகள் மற்றும் அவர் சேவையாற்றிய துறைகள் பற்றிய விபரங்கள் என்பன தரப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியில் அவர் பெற்ற சான்றிதழ்கள் சில, தலைமையேற்ற நிகழ்வுகள் சில, பங்காற்றிய நிகழ்வுகள் சில, பண்டிதரின் மறைவையொட்டி பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் என ஆவணப்படுத்தப்பட்டுமுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்நூல் பண்டிதர் இ.திருநாவுக்கரசு அவர்களைப் பற்றிய மூல வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 063014).