சு.செல்லத்துரை, ராஜி கெங்காதரன். தெல்லிப்பழை: தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
vi, 176 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-7973-00-5.
ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளரும், படைப்பிலக்கியவாதியுமான கலாபூஷணம் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் 65வது ஆண்டு (17.11.2015இல் நடந்தது) வாழ்த்துச் சிறப்புமலர். இந்நூலில் ‘விழிப்பு 1: குயிலின் நினைவு” என்ற முதலாவது பிரிவில் கோகிலா மகேந்திரனின் சிறந்த படைப்புகளின் தேர்ந்த சில ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாடகம், சிறுகதை, கவிதை, நீத்தார் நயப்புரைகள், குறுநாவல், கட்டுரைகள், சிறுவர் கதைகள் என்பன இதில் வகை மாதிரிகளாக இடம்பெற்றுள்ளன. கோகிலா மகேந்திரனின் இளமைக்காலப் புகைப்படங்கள், பங்கேற்ற நிகழ்ச்சிப் படங்கள், குடும்ப அங்கத்தவர்களுடனான முக்கிய தருணங்களின் புகைப்படங்கள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் ‘விழிப்பு 2: விழிகளின் நினைவு’ என்ற இரண்டாவது பிரிவில் திருமதி கோகிலா மகேந்திரனின் சில நூல்களுக்காக வழங்கப்பட்ட பிற ஆளுமைகளின் அணிந்துரைகள் வழிவந்த கருத்துக்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் அ.சண்முகதாஸ், க.சண்முகலிங்கம், கே.ஆர்.டேவிட், க.சச்சிதானந்தன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆனந்தி குமாரதாசன், நெல்லை க.பேரன், ச.பொ.கனகசபாபதி, வைத்திய நிபுணர் சீ.நவரத்தினம், பேராசிரியை ஏ.என்.கிருஷ்ணவேணி, சிவமலர் சுந்தரபாரதி ஆகியோர் வழங்கிய உரைகள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. இறுதியில் திருமதி கோகிலா மகேந்திரன் பங்கேற்ற நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிற்சிகள், உளவளத்துணை செயற்பாடுகள் நூல்விபரப்பட்டியல் என்பன தொகுத்துப் பட்டியலிடப்பட்டுள்ளன.