முஹம்மது நுஃமான் (மூலநூலாசிரியர்), முஹம்மது ஸெயின் (தமிழாக்கம்). கொழும்பு 10: முஹம்மது ஸெயின், ஸொஹரா மஹால், 211, B சேரம் பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (கொழும்பு 3: டைமன்ட் பிரின்டர்ஸ், 41, சென்.மைக்கல் வீதி).
(8), 448 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 21×13.5 சமீ.
முஹம்மது நுஃமான் 1941இல் 14 அத்தியாயங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த இந்நூலை தமிழாக்கம் செய்து, இந்தியா-பாக்கிஸ்தான் பிரிப்பு வரையிலான, 1947 வரையிலான நிகழ்ச்சிகளை விபரித்து 15ஆவது அத்தியாயமாக அதனைச் சேர்த்து இந்நூலை முஹம்மது ஸெயின் வெளியிட்டுள்ளார். 1005 முதல் 1857 வரையுள்ள 852 வருடங்களில் இந்தியாவின் எஜமானர்களாக இருந்த முஸ்லீம் மக்கள், அபாயகரமான எதிர்காலத்தையும் பேராபத்துகளையும் சமாளிக்கவேண்டியிருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக்கின் கொடியின்கீழ் இந்திய முஸ்லீம்கள் ஒன்றுதிரண்டு இவ்வபாயங்களையும் பேராபத்துக்களையும் எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை மூல நூலாசிரியர்; முதல் 14 அத்தியாயங்களில் விபரித்திருந்தார். இந்திய உபகண்டம், பாக்கிஸ்தான் இந்தியா ஆகிய இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்ட 1947ஆம் வருடம் வரையுள்ள எஞ்சிய நிகழ்ச்சிகளை 15ஆவது அத்தியாயத்தில் முஹம்மது ஸெயின் விபரித்துள்ளார். 1857இல் வீழ்ச்சியடைந்தவர்களின் ஆட்சியை 1947இல் இந்திய உபகண்டத்தின் இரு பெரும் பகுதிகளில் மீண்டும் நிலைநாட்டுவதில் அகில இந்திய முஸ்லிம் லீக் வெற்றிபெற்று விட்டதென்பதை விளக்குவதாக 15ஆவது அத்தியாயம்அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2779).