என்.சரவணன் (இயற்பெயர்: சரவணன் கோமதி நடராசா). நோர்வே: என்.சரவணன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017.(கந்தானை: புக்வின் வெளியீட்டகம், 126/10A, ஜயசூரிய மாவத்தை, ஹப்புகொட).
(4), xii, 228 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-38574-0-8.
அறிந்தவர்களும் அறியாதவையும்.
என்.சரவணன் (இயற்பெயர்: சரவணன் கோமதி நடராசா). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
xviii, 221 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-756-1.
இலங்கையில் குறிப்பிடத்தக்க வெவ்வேறு துறைகளில் செல்வாக்கைச் செலுத்திய முக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் தமிழில் வெளிவரும் முக்கிய நூல் இது. பல்துறை சார்ந்த ஆய்வாளர் ஹியூ நெவில், காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார், ரொபர்ட் நொக்ஸ்: கைதி மீட்டுத் தந்த வரலாறு, ஹென்றி மார்ஷல்: கண்டி வீழ்ச்சியின் சாட்சி, புரொஹியர் கண்ட இலங்கை, தலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட், புகைப்படங்களால் இலங்கையை பதிவாக்கிய வில்லியம் ஸ்கீன், தொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி ஏ.ஈ.புல்ஜன்ஸ், பதூதா கண்ட இலங்கை, டொய்லியால் பறிபோன இலங்கை, பெர்கியுசன்: இலங்கை ஊடகத்துறையின் தந்தை, பிளாவ்ட்ஸ்கி: இலங்கைக்கு வந்த இன்னொரு சங்கமித்தை, ஒல்கொட்: இலங்கைக்கு வந்த இரண்டாவது அசோகன், ஐவர் ஜென்னிங்ஸ்: அரசியலமைப்பு சிற்பி, டொரின் விக்கிரமசிங்க: சோஷலிச பெண் போராளி, இலங்கையை உலுக்கிய ‘ப்ரஸ்கேட்டல்’ சம்பவம், ஆயிஷா றவூப் எனும் விதேச பெண் ஆளுமை, பெண்ணுரிமை முன்னோடி மேரி ரட்ணம், நடேசையர்-மீனாட்சியம்மாள்: மலையகத்தின் விடிவெள்ளிகள், பைபிளை தமிழுக்குத் தந்த பிலிப்பு பால்டேஸ் பாதிரியார், ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 ஆண்டுகள்,இலங்கை போற்றும் சிவில் அதிகாரி லெனார்ட் வூல்ஃப், ஆர்தர் சி. கிளார்க்: அறிபுனை எழுத்துலகின் ஜாம்பவான், சுயம்புலிங்கத்தைக் கண்டெடுத்த மைக் வில்சன், ஆர்மண்ட் டீ சூசா: கண்டி கலவரத்தின் சாட்சி, அறிந்தவர்கள் சொன்னவை ஆகிய 26 பதிவுகளின் வழியாக வரலாற்றின் அறியப்படாததும் மறக்கப்பட்டதுமான சில பக்கங்களை சுவையாக வெளிக்கொணர்ந்துள்ளார்.