என்.சரவணன் (இயற்பெயர்: சரவணன் கோமதி நடராசா). நோர்வே: என்.சரவணன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கந்தானை: புக்வின் வெளியீட்டகம், 126/10A, ஜயசூரிய மாவத்தை, ஹப்புகொட).
xiii, 382 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-38574-1-5.
இலங்கையின் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, பௌத்த-சிங்கள தேசியவாதம் இனவாதமாக எப்படி இலங்கையில் வேரூன்றியது, அது எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருபவர் சரவணன். இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தின் நூற்றாண்டு நினைவாக 1915-2015 தினக்குரல் பத்திரிகையில் 04.10.2015 தொடக்கம் 58 வாரங்களாக வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். கண்டி கலவரம், முதலாவது உலகப்போரின் வகிபாகம், எழுச்சியுற்ற சிங்கள-முஸ்லிம் அடையாளம், சுதேசிகளும் வந்தேறிகளும், ஆரிய-சிங்கள-பௌத்த ஐதீகம், காலனித்துவத்தின் கீழ் மதத் தேசியவாதம், பௌத்த மறுமலர்ச்சியில் சிங்கள சாதியத்தின் பாத்திரம், சாதியத்தையும் சுமந்துகொண்டு வளர்ந்த சிங்கள பௌத்தம், பௌத்த எழுச்சியில் பஞ்ச மகா விவாதத்தின் வகிபாகம், கேர்ணல் ஒல்கொட்டின் வருகை ஏற்படுத்திய திருப்புமுனை, கொட்டாஞ்சேனைக் கலவரம், ஒல்கொட்டுக்கு நேர்ந்த கதி, பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன? அநகாரிக்க தர்மபாலவின் பிரவேசம், சிங்களவர்களே எழுச்சியுறுங்கள், தேசபக்தியின் குறுக்குவழி, ஆங்கிலேயர்களைக் கலக்கிய அந்த இரு நூல்கள், கம்பளை வழக்குகள், வதந்திகளும் சந்தேகங்களும், வெசாக் பௌர்ணமியில் தொடங்கிய கலவரம், நாடு பரவிய கலவரம், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய பொலிசார், நாட்டை உலுக்கிய இராணுவச் சட்டம், எட்வர்ட் ஹென்றி பேதிரிஸின் மரண தண்டனை, காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து, ஹென்றி: மரணத்தின் பின் விடுதலை, இராணுவச் சட்டம்-காலனித்துவ பயங்கரவாதம், அரங்கேறிய படுகொலைகள், ஆராச்சிமார் ஆற்றிய பங்கு, இந்திய இராணுவம் இலங்கை அனுபவம், அநகாரிக்க தர்மபாலவுக்கு நேர்ந்த கதி, அநகாரிக்கவின் ‘பற சுத்தா’, அநகாரிக்க அன்றிட்ட அத்திவாரம், சேர்.பொன் இராமநாதனின் வகிபாகம், இராமநாதன்: விருப்பும் வெறுப்பும், இராமநாதன்: இலங்கையின் முதிய நாயகன், தேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை ஏற்படுத்திய பயங்கரம், அநீதி இழைக்கவந்த இராணுவ நீதிமன்றம், கொஸ் மாமாவுக்கு மரணதண்டனை, அநகாரிக்கவின் சகோதரர் எட்மன்ட், ஆளுநர் மன்னிப்புக் கேட்டார், தேசத்துரோகம், பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம், ஆங்கிலேயர் விற்ற மன்னிப்பு, பொய் சாட்சிகளும் குருட்டு நீதியும், பிரெசரின் திட்டமும் பிடிபட்ட கள்ளர்களும், சாட்சி தராதவர்களை கண்ட இடத்தில் சுடு, பீதி தந்த நீதி, அநியாயங்களுக்கு இராணுவச் சட்டம் வழங்கிய லைசன்ஸ், பிணைக்காகப் பிடிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு: வெந்த புண்ணில் வேல், ஆளுநரால் குறிவைக்கப்பட்ட மகாபோதி சங்கம், பிராயச்சித்தம் தேடிய ஆளுநர் ஆண்டர்சன், டீ.எஸ்.சேனநாயக்க: 40 நாள் சிறை வாழ்க்கை, கேகாலை படுகொலைகளும் பித்தலாட்ட ஆணைக்குழுவும், கேகாலை துப்பாக்கிச் சூடு, ப்ரஸ்கேர்டலால் பதவி துறந்த படுகொலையாளன் டவ்பிகின், நீதிபதி எப்படி தனக்கு தீர்ப்பு வழங்க முடியும்? நூற்றாண்டு பாடம் ஆகிய தலைப்புகளில் இவை விரிவாக எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63068).