13953 இலங்கையின்பூர்வ சரித்திரம்.

ஜி.ஸி.மெண்டிஸ் (ஆங்கில மூலம்), நவாலியூர் சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 1942. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 149 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-396-9.

ஜீ.சீ.மெண்டிஸ் (1893-1976) எழுதிய The Early History of Ceylonஎன்ற நூலின் தமிழாக்கம். ஆதிக்குடிகள்: புத்த சமயம் இலங்கையிற் பரம்புதல், புராதன காலம், மத்திய கால முற்பகுதி, பொலனறுவைக் காலம், தென்மேற்கில் ஆதிக்கம்  முடிவுரை ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அனுபந்தங்களாக ஆதாரங்கள், அரசர் நாமாவளி, சிங்கள வரிவடிவின் வளர்ச்சியைக் காட்டும் சித்திரப் படத்தின் விளக்கம், பயிற்சிக்கான வினாக்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் விளக்கக் குறிப்புகளுடனான 24 சித்திரப் படங்களும், பன்னிரண்டு தேசப்படங்களும் தரப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் புராதன இதிகாசக் கதைகளையும் ஐயத்துக்கிடமான பல விஷயங்களையும் நீக்கி, திட்டமாக உண்மையெனக் கூறக்கூடிய சம்பவங்களையே தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளனர். மேலும், சம்பவங்களையும், பெயர்களையும், காலங்களையும் வரிசையாகக் கூறுவதோடு நில்லாது,  இலங்கை வாசிகளின் மனோவிருத்தி, செல்வம், வாணிபம், சிற்பம், இலக்கியம் என்பவற்றை ஆதிகாலந்தொட்டுத் தற்காலம் வரையிலும் இந்நூலில் விவரிக்க முயன்றுள்ளார். எனவே, இந்நூல் வாசிப்போருக்கு தெவிட்டாத இன்பம் தரும் விஷயங்களைக் கூறும் ஒரு சரித்திர நூற்களஞ்சியமாகும்.

ஏனைய பதிவுகள்

12974 – போரின் படிப்பினைகள்-3: நம்பிக்கையின் மலர்ச்சி.

ஜோன் றிச்சார்ட்சன் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெர்ரஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (நுகேகொட: பிக்பேர்ட் பிரின்டர்ஸ், 119, சுபத்திராம வீதி, கங்கொடவில).