நா.சண்முகதாசன். யாழ்ப்பாணம்: நா. சண்முகதாசன், 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 93, ஸ்ரான்லி வீதி).
128 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20.5×13.5 சமீ.
நா.சண்முகதாசன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகதாசன் இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், மாவோயிச இடதுசாரி அரசியல்வாதியுமாவார். இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககால பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தவர். 1993 பெப்ரவரி 8 இல் மரணமான சண்முகதாசன் 1971ஆம்ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் பத்து மாதங்கள் அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது எழுதப்பட்ட வரலாற்று நூல். புராதன இலங்கை, ஐரோப்பியர்களின் வருகை, முதலாவது உலக யுத்தமும் அதன் பின்னரும், நவகாலனித்துவத்தின் தோற்றம், பண்டாரநாயக்கா சகாப்தம், இலங்கையின் 1971ஆம் ஆண்டு ஏப்ரல் சம்பவங்களைப் பற்றிய ஓர் ஆய்வு, முடிவுகள் ஆகிய ஏழு அத்தியாயங்களையும் சேகுவேரா கும்பலினால் திசை திருப்பப்பட்டவர்களுக்கு என்ற பின்னிணைப்பையும் இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118678).