13957 பூமண்டல புராணம்: இரண்டாம்பாகம்: பூலோக மகான்களின் சரிதம்: ஏழாந் தரத்துக்குரியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், 1வது பதிப்பு, 1936. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

(2), 74 பக்கம், சித்திரங்கள், விலை: சதம் 40, அளவு: 20.5×13.5 சமீ.

நூலாசிரியர் ஆ.வீ.சோமசுந்தரம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர். First Book of World History Part 2 (For Standard VII): The Story of famous Men என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள இந்நூலில் மார்ட்டின் லூதர், எட்டாம் ஹென்றி, லோயா நகரத்துச் செயின்ற் இக்னேசியஸ், மவுனியான உவில்லியம் (William the Saint), கேர்னாண்டோ கோட்டீஸ், எலிசபெத் இராணி, ஷேக்ஸ்பியர், அக்பர், முதலாம் சார்ள்ஸ், ஒலிவர் குரொம்வெல், மகா பீற்றர், பதினான்காம் லூயி மன்னன், மகா பிரடெரிக், சேர் ஐசாக் நியூட்டன், ஜோர்ஜ் வாஷிங்டன், (சத்திரபதி) சிவாஜி, றொபேட் கிளைவும் டியூப்பிளேயும், வாரன் ஹேஸ்டிங்ஸ், மாலுமி குக் ஆகிய 19 வரலாற்று நாயகர்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வட்டுக்கோட்டை சைவாங்கில வித்தியாசாலை அதிபர் எம்.சபாரத்தினசிங்கம் அவர்களின் அறிமுகத்துடன் கூடிய நூல் இது. (யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98788)

ஏனைய பதிவுகள்