அ.அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி, யாழ்ப்பாண மாவட்டக் கிளை, 1வது பதிப்பு, பதிப்பு ஆண்டு அறியப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இலட்சியப்பாதை, இலங்கையில் தமிழன் தொன்மை, சோல்பரி ஆணைக்குழு, தமிழ்க் காங்கிரசின் வெற்றியும் அதன் பிளவும், இணைப்பாட்சி, நந்திக் கொடி, கட்சியின் ஆரம்பம், சோஷலிசமும் தீண்டாமை ஒழிப்பும், சோல்பரி யாழ்ப்பாண வருகை, சிங்கக் கொடி, கட்சியின் வளர்ச்சி, கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம், கட்சியின் முதலாவது தேசிய மாநாடு, பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா யாழ் வருகை, 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், இரண்டாவது தேசிய மாநாடு, ஓகஸ்ட் 12 ஹர்த்தாலில் கட்சியின் பங்கு, கொத்தலாவலைக்குக் கறுப்புக்கொடி, சிங்கள வெறியாட்டம் ஆரம்பம், 3ஆவது தேசிய மாநாடு, ஐக்கிய தேசிய கட்சியின் களனி மாநாடு, தமிழ் ஈழத்தில் ஹர்த்தால், தமிழர் ஐக்கிய முன்னணிப் பேச்சு, 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், ஆனி ஐந்தும் தனிச் சிங்களச் சட்டமும், அம்பாறைக் கலவரம், திருமலை யாத்திரை, நான்காவது மாநாடு 17.18,19 ஓகஸ்ட் 1956, சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், பெப்ரவரி நான்கும் 1957இல் தியாகி நடராசன் கொலையும், அமைச்சர்கள் வருகையும் பகிஷ்காரமும், பண்டா செல்வா ஒப்பந்தம், மட்டக்களப்பில் சிறப்பு மாநாடு என இன்னோரன்ன குறுந்தலைப்புகளின் வழியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிப்பாதை இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24946).