அ.அமிர்தலிங்கம் (மூலம்), பாஞ். இராமலிங்கம் (பதிப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: நாவலர் அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை, இல. 58, Seymour Avenue, East Ewell, Surrey KT17 2RR, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 1வது பதிப்பு, 1990. (சென்னை: திருமலை ஓப்செட் பிரின்டர்ஸ்).
192 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 0-9543502-9-3.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உத்தியோகபூர்வ மாத இதழான உதயசூரியனில் எண்பதுகளின் ஆரம்ப காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 22 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் நெருக்கடிகள் மிகுந்த அன்றைய காலகட்டத்தில் மிதவாத அரசியலில் இளைஞர்கள் நம்பிக்கை குன்றி ஆயுத இயக்கங்கள் தோன்றி அதனுடன் சேர்ந்து சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து, எமது அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்ட காலகட்டம் அது. இலட்சிய இதயங்களுடன் விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கப் புறப்பட்ட அவ்விளைஞர்களுக்கான அறிவுரைகளையும் அன்றைய காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கி அமரர் அமிர்தலிங்கம் அவ்வேளையில் தன் அரசியல் அனுபவத்துடனும் இன அக்கறையுடனும் உதயசூரியனில் எழுதிவந்துள்ளார். அக்கட்டுரைகளின் மீள்பிரசுரமாக 37 வருடங்களின் பின்னர் இப்பொழுது வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 258810CC).