நவஜீவன் அனந்தராஜ் (பதிப்பாசிரியர்). கனடா: ஈ-குருவி, தபால் பெட்டி எண் 15, பிக்கரிங், ஒன்ராரியோ, L1V 2R2, 1வது பதிப்பு, மே 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 37×27 சமீ.
01.01.2009 முதல் 18.05.2009 வரை கிளிநொச்சியில் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து பத்தாண்டுகளின் நினைவாக ஈ-குருவி இணைய இதழினரால் வெளியிட்டுள்ள இந்நினைவுச் சிறப்பிதழ் பத்திரிகை உருவில் அச்சிடப்பெற்றுள்ளது. 75000 தமிழ் மக்களைப் பலிகொண்ட இப்பேரவலம் தொடர்பான நினைவுப் பதிவுகள் கட்டுரையுருவில் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன. முதலில் 1956 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த 130 இனவழிப்புப் படுகொலைகள் பற்றிய பட்டியல் இடம்பெறுகின்றது. தொடர்ந்து, நீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி (நிர்மானுசன் பாலசுந்தரம்), இனப்படுகொலை நேற்று-இன்று-நாளை (ரமணன் சந்திரசேகரமூர்த்தி), இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் (ஜனகன் முத்துக்குமார்), மீண்டும் நாம் எழுவோம் (ராஜ்மோகன் செல்லையா), மீள் (இந்திரன் ரவீந்திரன்), ஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்தாண்டுகள் (யதீந்திரா), இறுதியுத்த காவு வண்டிகள் (நவஜீவன் அனந்தராஜ்), உண்மையான அஞ்சலி (புருஜோத்தமன் தங்கமயில்), ஈழத்தின் படுகொலைகளின் துயரம் நிறைந்த வரலாறுகள் (வல்வை ந.அனந்தராஜ்), ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னரான சூழலில் பத்தாவது மே பதினெட்டு (நிலாந்தன்), வாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம் (நிலவன்), அரங்கத்தின் ஊடாக ஆற்றுப்படுத்தல் (நிலவன்), போரின் பின்னரான வாழ்வியலும் ஈழ மக்களும் (காவியா), தமிழ் எனும் உயர்ந்த அடையாளம் (வேல்), முள்ளிவாய்க்கால் நிழற்போர் (தீபச்செல்வன்), பிரபாகரன் சட்டகமும் நந்திக்கடல் கோட்பாடுகளும் (ஆசிரியர்), நிலம் நழுவுகிறது (தமிழ்நதி), பேனாமுனைகள் ஊடகங்களை ஊடுருவியபோது (குரு அரவிந்தன்), திட்டமிட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தமிழர் இனப்படுகொலை (தர்ஷினி, உ), சிங்களத் திரைப்படங்கள் எதிர் முரண் நிலை (ரதன்), தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (நவஜீவன்), சக மனிதனைப்பற்றி சிந்திக்கவேண்டிய சமூகக் கடமை இவர்களுக்கு இல்லையா? (சௌந்தரி கணேசன்), முள்ளிவாய்க்காலும் நானும் (சுரேன் கார்த்திகேசு), பொய்யான நல்லிணக்கத்துக்கு இடப்பட்ட மெய்யான முற்றுப்புள்ளியும் மாற்றுத் தலைமையின் அவசியமும் (மு.திருநாவுக்கரசு), பத்தாவது மே 18ஐ எப்படி நினைவு கூரலாம் (நிலாந்தன்) ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளும் இடைக்கிடையே கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.