ரகுமான் ஜான் (தொகுப்பாசிரியர்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை).
528 பக்கம், விலை: இந்திய ரூபா 525.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752392-5-3.
இந்நூலின் முதலாவது பகுதியில் தன்னியல்புவாதம், இண்டாவது பகுதியில் எரிகின்ற பிரச்சினைகள், எமது அமைப்பில் சூடேறிய பிரச்சினைகளின் விவாதங்கள் ஆகிய தலைப்புகளில் தன் கருத்துகளை முன்வைக்கும் ஆசிரியர் தொடர்ந்து பதினெட்டு அத்தியாயங்களில் முறையே கேள்விக்கொத்து, லெனினுடைய கட்சிக்கோட்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் குறித்து, கடந்தகால சிந்தனை முறைகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து, அமைப்புத்துறை குறித்து, புரட்சிகர கட்சி என்னும் கருத்தாக்கம் குறித்து, குழு வேலை முறை (Committee System) குறித்து, கோட்பாட்டுச் செயற்பாடு குறித்து, உயிர்ப்பின் பாத்திரம் குறித்து, தலைமறைவு குறித்து, அணிதிரட்டல் தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டுக் கிளைகள் தொடர்பாக, படைத்துறை பற்றி, ஆட்களிற்கு வேலையும், வேலைக்கு ஆட்களும் இல்லாத பிரச்சினை குறித்து, கையாள்கை பற்றிய பிரச்சினைகள், சில மாற்று முன்மொழிவுகள் குறித்து, எழுத்தில் போடுவதன் அவசியம் குறித்து, இன்னும் சில பிரச்சினைகள் குறித்து, முடிவுரை ஆகிய தலைப்புகளில் தன் கருத்துக்களை மிக விரிவாக விளக்கியுள்ளார்.