13964 ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

ரகுமான் ஜான் (தொகுப்பாசிரியர்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை).

296 பக்கம், விலை: இந்திய ரூபா 275.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752392-6-0.

ஈழத்தமிழரது சமூக உருவாக்கம், தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் திட்டம், தமிழீழ மக்கள் கட்சியின் மூலோபாயம், தந்திரோபாயம் (Strategical and Tactical Issues) ஆகிய மூன்று அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. புரட்சிகர கட்சி என்றால் என்ன? திட்டம் என்றால் என்ன?, மூலோபாயம், தந்திரோபாயம் என்றால் என்ன ஆகிய மூன்று ஆக்கங்களும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். ஈழப் போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாக தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்