யாழ்ப்பாணம்: Institute of Political Studies உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
1994 ஓகஸ்ட் 16ஆம்திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அவரது முன்னணியும் வெற்றியீட்டியதையடுத்து நடக்கவிருக்கும் அரசியல் நகர்வுகளின் எதிர்வுகூறலாக இந்நூல் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றித் தமிழ் மக்கள் தெளிவுபெற்றுக்கொள்ளும் வகையில் விளக்கமளிக்கும் இந்நூல், அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சிக்கலான பல இராஜதந்திர நகர்வுகள், அவற்றினது சாத்தியப்பாடுகள் என்பன பற்றியும் இந்நூலிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10090).