கே.எஸ்.ஏ.கபூர். யாழ்ப்பாணம்: சி.கதிரவேற்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர், கோப்பாய் தொகுதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, 90, 2ஆம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
‘சின்னஞ்சிறிய நாடுகளின், இனங்களின் வரலாறுகளையும் பொதுவுடைமைவாதிகளின் இனவாதக் கொள்கைகளையும் சரியான ஆதாரங்களுடனும் புள்ளி விபரங்களினதும் உதவியுடன், சிங்கள ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு சவாலாக எழுதியுள்ளார்’ என இந்நூலுக்கான அணிந்துரையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 156261).