13971 இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு.

ப.புஷ்பரட்ணம். சுவிட்சர்லாந்து: தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2017. (மலேசியா: உமா பதிப்பகம்).

ix, 228 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19.5 சமீ., ISBN: 978-3-906871-15-8.

சுவிஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களின் மொழியறிவையும் கல்வியறிவையும் வளர்க்கும் பொருட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கிட்டத்தட்ட 110 ஆசிரியர்களும் தனிப்பட்ட ரீதியாக செயற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்க் கல்விச் சேவையினர் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய இரு நூல்களை சமகாலத்தில் வெளியிட்டுள்ளனர். இலங்கை வரலாறு கூறும் இந்நூலில் இலங்கையின் பூர்வீக மக்களும் பண்பாடும், இலங்கையில் மொழிவழிப் பண்பாட்டின் தோற்றம், நாகநாடும் (நாகதீபம்) தமிழர்களும், பொலநறுவை இராசதானியும் தமிழர்களும், பொலநறுவையின் வீழ்ச்சியும் வன்னியும், யாழ்ப்பாண இராச்சியம், ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கைத் தமிழர் ஆகிய ஏழு இயல்களில் இவ்வரலாறு வண்ணப் புகைப்பட ஆதாரங்களுடன் விரித்தெழுதப்பட்டுள்ளது. எட்டாம் இயல் உசாத்துணைநூல்கள், கட்டுரைகள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்