13972 நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா.

கலையரசன். சென்னை 600002: கீழைக்காற்று, 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600024: எழில் பிரிண்டர்ஸ்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5×14 சமீ.

தமிழரின் தாயகம் ஆப்பிரிக்கா, பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன், சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள், தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள், கோயிலில் பாலியல் தொழில், ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரிகம், ஆடியில் உயிர்த்தெழுந்த திராவிடர்களின் கருப்பு இயேசு, வேல்முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம், சிரியாவில் தமிழுக்கு தம்முழ் என்றும் பெயர், கோபுரங்கள் கட்டுவது ஆண்டவருக்கு விரோதமானது, சிவபெருமான் ஈராக்கை ஆண்ட கருப்பின அரசன், அரபுநாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி, ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த அரபி கண்டம், அரேபியரும் தமிழரும் சில கலாச்சார ஒற்றுமைகள், கன்னி மரியாளின் மகனான குறிஞ்சிக் கடவுள் குழந்தை அல்லா, தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர், தேர்த் திருவிழா: ஆரிய மன்னர்களின் வெற்றிவிழா ஆகிய 17 கட்டுரைகளின் வழியாக தமிழர்களின் பன்னாட்டுத் தொடர்புகள் பற்றி சுவையாக விளக்கியிருக்கிறார். பிற்சேர்க்கைகளாக, ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள்-ஓர் ஆய்வு, ஐரோப்பியர்கள் இனஅழிப்பு செய்த ஆப்பிரிக்க வெள்ளையினம் ஆகிய இரு கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் இலங்கையிலிருந்து ஹொலண்ட் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வாழ்பவர். கலையகம் என்ற வலைப்பதிவில் அவ்வப்போது கலையரசன் எழுதிய கட்டுரைகள் இவை.

ஏனைய பதிவுகள்

Lucky 30 Bet Calculator

Content Arbitrage Calculator: best bookmakers for football betting Chances Odds Told me Exactly how much Would you Win For individuals who Wager $ten? Other Wagers

16083 ஈழத்து ஆலயங்கள்: யாழ். மாவட்ட திருத்தலங்கள் (பாகம் 1).

வை.சோமசேகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால்