நா.சண்முகநாதன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: குடிநல சுகாதார வாரமலர், மாநகரசபை அலுவலகம், 1வது பதிப்பு, 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், இணைந்து அச்சிட்டோர், சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(98) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1.00, அளவு: 26.5×20.5 சமீ.
யாழ்ப்பாண மாநகரசபை 1968இல் வெளியிட்ட சிறப்பு மலர் இது. யாழ். மாவட்டம் பற்றிய விரிவான தகவல்களை இம்மலர் ஆவணப்படுத்தியுள்ளது. உங்கள் நகர் (கு.நேசையா), பண்டைக்கால யாழ்ப்பாணம் (வி.கந்தவனம்), யாழ்ப்பாண நகரம் (கா.இந்திரபாலா), யாழ்ப்பாண நகரம்: உருவவியல் குறித்து ஓர் குறிப்பு (க.குணராசா), யாழ.நகரின் பொழுதுபோக்குச் சாதனங்கள் (யாழ்வாணன்), டாக்டர் சுப்பிரமணியம் பூங்கா (ஏ.லூயிஸ்), யாழ்ப்பாணச் சிறப்பு (எம்.ஜி), யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் (வே.இ.பாக்கியநாதன்), யாழ். மாநகரசபை வரலாற்றில் முக்கிய மைல்கற்கள், புத்தெழில் கொழிக்கும் யாழ் நகர் (நவாலியூர் நடேசன்), எழில்மிகு யாழ்நகர் -கவிதை (வி.கந்தவனம்), வரிப்பணம் எப்படிச் செலவாகிறது (வே.தங்கவேலு), யாழ் நகரின் எதிர்கால நிர்மாணம் (இ.வயித்திலிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 026841).