ஈஸ்வரநாதபிள்ளை குமரன் (மலராசிரியர்), யாழ்ப்பாணம்: வலி தென்மேற்கு பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, 2014. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ், இல. 122, காங்கேசன்துறை வீதி).
xx, 241 பக்கம், தகடுகள், வரைபடம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
இப்பண்பாட்டு மலரானது, வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான தகவல்கள், இப்பிரதேசத்தின் அறிஞர்களான மயில்வாகனப் புலவர், சோமசுந்தரப் புலவர் போன்ற தமிழ்ப் புலமையாளர்களின் வரலாறு, பிரதேச பாடசாலைகள் சிலவற்றின் வரலாறுகள் என்பனவற்றுடன் இப்பிரதேசத்தின் பாரம்பரிய சுதேச மருத்துவமுறை, ஆயுள்வேத மருத்துவம் மற்றும் பிரதேச கலை, கலாசாரம், பண்பாடு, வரலாற்று விழுமியங்கள் என்பனவற்றுடன் இப்பிரதேசத்தின் கலைஞர்கள் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. வலி தென்மேற்குப் பிரதேசச் செயலகம்: தோற்றமும் வளர்ச்சியும், அழியும் அழகிய வாழ்க்கைக் கோலங்கள், சமயமும் பண்பாடும், கலை இலக்கிய எழுச்சி, மருத்துவம், கிராமங்கள்: வரலாறும் பழமையும், கல்விப் பாரம்பரியம் ஆகிய ஏழு பிரிவுகளில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.