றமீஸ் அப்துல்லா (பிரதம பதிப்பாசிரியர்), ஐ.எம்.இப்றாஹிம், அஷ்ஷேஹ் ஏ.சீ.ஏ.எம். புஹாரி, எம்.ஐ.எம்.சாக்கீர் (பதிப்புக் குழு). சம்மாந்துறை: சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசமான சம்மாந்துறை பற்றிப் புலமை நோக்கிலும் தெளிவான, இலகுவான நடையிலும் எழுதப்பட்ட ‘சம்மாந்துறை: வரலாறும் வாழ்வியலும்’ என்ற பாரிய தொகுப்பு 23.10.2019 அன்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டபோது வெளியிடப்பெற்றிருந்த வெளியீட்டுவிழா நினைவு மலர் இதுவாகும். நூற்சுருக்கம், மணம் தரும் மலர் (றமீஸ் அப்துல்லா), பணி பூரணமாகிறது (A.C.A.M. புஹாரி கபூரி), முழுமைப்படுத்தப்பட்ட நூல் (அல்ஹாஜ் K.L.ஆதம்பாவா மதனி), மண் மணக்கும் பதியின் மங்காப் புகழ்பெறும் நூல் (எஸ்.சங்கரப்பிள்ளை), பரிபூரண நூல் (K.M.முஸ்தபா), பூரிப்படைகிறோம் (மு.யா.அஹ்மத் ஜலீல்), வரலாற்று வேர்களைக் கொண்ட ஊர் (ரவூப் ஹக்கீம் எம்.பி.), மகிமைமிக்க ஊர் (ரிஷாட் பதியுதீன்), சம்மாந்துறை மண்ணின் வரலாற்றுப் பேழை (பைசல் காசிம்), சாதனை ஜாம்பவான்களை உருவாக்கும் பூமியாக எப்போதும் சம்மாந்துறை மிளிர்கின்றது (H.M.M.ஹரீஸ்), தனித்துவங்களைக் கோடிட்டுக் காட்டும் நூல் (M.I.M.மன்சூர்), சம்மாந்துறை பெருமை பெறுகின்றது (S.M.M.இஸ்மாயில்), சரித்திரப் புகழ் வாய்ந்த சம்மாந்துறை (A.L.M.நஸீர்), கீர்த்திமிகு நமது சரித்திரம் (A.M.M.நௌசாத்), மகத்துவம் மிக்கதொரு மண்ணின் வரலாறு (A.L.M.அதாவுல்லா), காலத்தின் முக்கிய பணி (I.L.M.மாஹிர்), ஒரு அசாதாரண முயற்சி (M.L.A.அமீர்), Important Documentary Evidence (மொஹமட் ஏ.ஹஸன் அலி), மனங்களுக்கு ஒத்தடமிடுகிறது (I.M.ஹனிபா), இரட்டிப்பு மகிழ்ச்சி (S.L.முஹம்மது ஹனீபா), பாராட்ட வேண்டிய பணி (M.S.சஹதுல் நஜீம்), தாய்மண் வாசனையை மீள நுகர்கிறேன் (V.இஸ்ஸதீன்), பெருமுயற்சி திருவினையாகிறது (ஐ.எல்.றசீன்), நன்றி மறவாத மக்கள் (M.K.இப்னு அசார்), வாழ்த்துச் செய்தி (M.S.M..நவாஸ்) ஆகிய வாழ்த்துச் செய்திகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.