13980 மர்ஹூம் டாக்டர்எம்.எம்.மீரா லெவ்வை அவர்கள் எழுதிய சம்மாந்துறை சரித்திரம்.

எம்.எம்.மீரா லெவ்வை (மூலம்), எம்.எல்.ஏ.காதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xlviii, 198 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-551-2.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமரர் வைத்தியர் எம்.எம்.மீரா லெவ்வை எழுதிய இந்நூல் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களின் ஆராய்ச்சி முன்னுரையோடு வெளியிடப்பட்டுள்ளது. மூலநூல் எழுதப்பட்ட காலகட்டம் சம்மாந்துறையையும் அதனைச் சூழவுள்ள  பிராந்தியங்களையும் பொறுத்தவரையில் முக்கிய காலகட்டமாகும். மீரா லெவ்வை 1948இல் தனது தொழிலில் இருந்து ஓய்வுபெற்றபின் இந்நூலை எழுதியிருந்தார். இந்நூலில் தன் காலத்துச் சம்மாந்துறை முஸ்லீம்களின் வாழ்வியலை ஆசிரியர் நன்கு சித்திரித்துள்ளார். இன்றைய வாழ்வியலிலிருந்து அது மிகவும் வேறுபடுவதை வாசகர் அவதானிக்கலாம்.  இந்நூல் ஊரும் வரலாறும் – சிங்கள ஆட்சிக் காலம் 1400-1622, ஐரோப்பியர் வருகை, கண்டியில் ஆட்சி மாற்றம், பிரித்தானியர் காலம், கிராமிய வாழ்வியற் கோலங்கள், விவசாயப் பொருளாதாரம், கலாசார நிகழ்வுகள், மரைக்கார் சபை முறையும் வழிபாட்டுத் தலங்களும், இயற்கை அனர்த்தங்கள், வரலாற்றுப் பதிவுகள், மானிய முறை ஆகிய 11 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. கலைச்சொற்களும், 1982இற்குப் பின் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்பன பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. பேராசிரியர் காதர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை நிறைவு செய்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஸ்தாபக துணைவேந்தராக விளங்கியவர்.

ஏனைய பதிவுகள்