13981 வரலாறும் ஆளுமைகளும்: பேராசிரியர் வி.சிவசாமி கட்டுரைத் தொகுப்பு.

வி.சிவசாமி (மூலம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).

xiv, 399 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9233-40-4.

இந்நூலில் பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி அவர்கள் எழுதிய 26 கட்டுரைகள் வரலாறு, ஆளுமைகள் ஆகிய இரு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘வரலாற்றுப்’ பிரிவில், தொல்பொருளியலும் வரலாறும், இந்திய வரலாற்று மரபுப் பின்னணியில் தமிழக வரலாற்றியல், சங்க நூல்களில் வரலாற்றியல்பு, தமிழகப் பிரசஸ்திகளும் மெய்க்கீர்த்திகளும், வடமொழிச் சாசனமும் தமிழ்ச் சாசனமும், யாழ்ப்பாணமும் தொல்பொருளியலும், யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகத்தின் தேடல்கள், ஈழத்துத் தொல்பொருளியலும் தமிழியலும், நல்லூரும் தொல்பொருளும், கந்தரோடை, வல்லிபுரம்-ஒரு தொல்லியற் களஞ்சியம், போல்டேயஸ் கண்ட யாழ்ப்பாணம், தெல்லிப்பழையிற் கிடைத்த மத்தியகால நாணயங்கள், யாழ்ப்பாணக் காசுகள் ஆகிய 14 கட்டுரைகளும், ‘ஆளுமைகள்’ என்ற பிரிவில் சேர்.பொன்.இராமநாதனின் சமய, கல்விசார் பங்களிப்பு, சுவாமி ஞானப்பிரகாசரின் திராவிடர் பற்றிய ஆய்வுகள், சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழியற் தொண்டுகள், சுவாமி ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும், இராசரத்தினமும் இராமநாதனும், இராமநாதன் இசைக் கல்லூரியின் தோற்றமும் நிறுவுநரும், சிவயோக சுவாமிகள்-சில சிந்தனைகள், விபுலாநந்த அடிகளும் தமிழர் வரலாறும், சுவாமி விபுலாநந்தரின் இசை நடனப் பணிகள், சுவாமி விபுலாநந்தரும் கலைகளும், பல்துறை விற்பன்னரான பண்பாளர் சுப்பையா நடேசபிள்ளை, பண்டிதர் சு.சுப்பிரமணியம் செய்துள்ள காளிதாசரின் குமாரசம்பவத் தமிழாக்கம் ஒரு நோக்கு ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி (16.09.1933 – 08.11.2014) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரியரும், தமிழறிஞருமாவார். புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார். இவர் யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 இல் இருந்து பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Jogue Bingo Online

Content ¿es Confiable Playbonds Sports Brasil? Análisis De Los Pros Y Los Contras Haveres Criancice Depósitos Abicar Playbonds Arruíi ánteriormente caminho é briga apontamento, a