தினத்தந்தி ஆசிரியர் குழு. சென்னை 7: தந்தி பதிப்பகம், 86, ஈ.வீ.கே.சம்பத் சாலை, வேப்பேரி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (சிவகாசி 626130: ஸ்ரீநிவாஸ் பைன்ஆர்ட்ஸ் லிமிட்டெட், 340/3, கீழத்திருத்தங்கல்).
xviii, 558 பக்கம், வண்ணப் புகைப்படங்கள்;, விலை: இந்திய ரூபா 360., அளவு: 25×18 சமீ.
2009ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் தொடராக வெளிவந்த ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இடம்பெற்றிருந்த இலங்கைத் தமிழர் வரலாறு என்ற கட்டுரைத் தொடரின் நூல் வடிவம் இது. அரிய பல புகைப்படங்கள், விளக்கச் சித்திரங்கள் என்பனவற்றுடன் தினத்தந்தி ஆசிரியர்களால் தொகுத்து எழுதப்பட்டுள்ள இந்நூல் இலங்கையின் ஆரம்ப வரலாற்றினை விளக்கும் வகையிலான ‘இலங்கையின் பூர்வகுடிகளின் வரலாறு’ என்ற முதலாவது அத்தியாயம் தொடங்கி, இராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான ‘சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு’ என்ற 188ஆவது அத்தியாயம் வரையிலுமான இலங்கைத் தமிழர்களின் படிமுறையிலான வரலாறாக விரிந்துள்ளது.