13989 இலங்கைப் பயணம்.

கல்கி (மூல ஆசிரியர்), எஸ்.கௌமாரீஸ்வரி (பதிப்பாசிரியர்). சென்னை 14: சாரதா பதிப்பகம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, 11வது பதிப்பு, ஏப்ரல் 2012, 1வது பதிப்பு, மார்ச் 2001. (சென்னை 2: கிளாசிக் பிரின்டர்ஸ்).

vi, 137 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 21.5×14.5 சமீ.

1930களில் ஆனந்த விகடன் சார்பில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும், ஓவியர் மாலியும் இலங்கைக்குப் பயணம்செய்து அங்கு பலநாட்கள்; சுற்றுப் பிரயாணம் செய்து திரும்பினார்கள். இலங்கைப் பயணம் பற்றியும், இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் இடங்கள், அங்குள்ள சிறப்புகள் முதலியன குறித்தும் கல்கி-கிருஷ்ணமூர்த்தி அவருக்கே உரிய தனித் தன்மையோடு ரசமாகப் பல வாரங்கள் தொடர்ந்து விகடனில் எழுதினார். தன்னுடைய இலங்கைப் பயணம் பற்றி கல்கி எழுதியிருக்கும் தொடரைப் படிக்கும்போது, நம் இதயங்களை இலங்கையை நோக்கிப் பெயர்த்துக்கொண்டு போகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஆதித் தொடர்புகள், பாரம்பரிய நெருக்கங்கள், வரலாற்றுவழி ஆதாரங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகள், இலங்கையின் வனப்புகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நேர்மையோடு ஆவணப்படுத்தி இருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களால் நூலுருவில் இக்கட்டுரைத் தொடர் பிரசுரம் கண்டிருந்தது. சாரதா பதிப்பகத்தினரால் 2001இல் முதற்பதிப்பைக் கண்டுள்ள இந்நூலில், இலங்கையின் தலைநகர், இலங்கை அரசாங்கம், விபீஷணன் எங்கே, கண்டேன் கண்டியை, புத்தரும் காந்தியும், இலங்கையில் நமது சகோதரர்கள், தேயிலைத் தோட்டத்திலே, வந்தாரே கங்காணியார், வெகுநாளைத் தொந்தம், யாழ்ப்பாண ஞாபகங்கள், யாழ்ப்பாண விஷேசங்கள், போய் வருகிறோம் ஆகிய 12 அத்தியாயங்களில் பயணக் கட்டுரைவடிவில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Betting Resources

Articles Just what are Your Vip Selections Minimal Odds? Protipster Is A major international Area From Tipsters Where you should Bet on More than Wagering