க.பத்மா. சென்னை 600012: ஜெய்ஹிந்த் பதிப்பகம், இல. 16, காவலர் குடியிருப்பு, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, 1வது பதிப்பு, 2015. (தஞ்சாவூர் 613 005: குழந்தை இயேசு பிரின்டர்ஸ், மாதாக்கோட்டை சாலை).
xxiv, 150 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ.
தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடந்த நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இலக்கிய மற்றத்தின் துணைச் செயலாளர் தஞ்சைக் கவிஞர் க. பத்மா எழுதிய ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள் எனும் இப் பயண நூல் வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டில் நூலாசிரியர் இலங்கைக்குச் சென்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் நேரில் சந்தித்துத் திரும்பிய அனுபவத்தை இந்நூலில் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261573cc).