13993 மணற்கேணி – இதழ் 32: நவம்பர்-டிசம்பர் 2015.

ரவிக்குமார் (ஆசிரியர்). சென்னை 600005: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், அறை எண் 2, புதிய எண் 10, பழைய எண் 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (தமிழ்நாடு: அகரம் அச்சகம், தஞ்சாவூர்).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 24.5×18.5 சமீ., ISSN: 2249-9164.

முனைவர் ரவிக்குமார் அவர்களை ஆசிரியராகக்கொண்டு ‘மணற்கேணி’ ஆய்விதழ் சென்னையிலிருந்து வெளிவருகின்றது. 32ஆவது இதழில், Sascha Ebeling க.ப.அறவாணன், மு.நஜ்மா, தி.சு.நடராசன், பெ.மாதையன், தோழர் ஆனி ராஜா, வீ.அரசு, ஆகிய அறிஞர்களின் படைப்பாக்கங்களுடன், சந்திரலேகா வாமதேவா எழுதிய ‘பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை என்ற எமது ஆசான்’, Jean-Luc Chevillard எழுதிய ‘அன்றும் இன்றும் நாளையும்: Remembering Professor A.Veluppillai(1936-2015)”, Sascha Ebeling vOjpa  ‘Professor A.Veluppillai: An Inscription in our Heart’, வை.சுப்பராயலு எழுதிய ‘Veluppillai’s study of the Dialects in Inscriptions’, அமரர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் படைப்பாக்கமான ‘தத்துவநெறிக் காலம்’ ஆகிய கட்டுரைகளும் இவ்விதழில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இறுதியாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய நூல் விமர்சனமான ’நீட்சி பெறும் சொற்கள்’ என்ற (லறினா அப்துல் ஹக் அவர்களது நூலின் திறனாய்வுக்) கட்டுரையும் இடம்பெறுகின்றது.

ஏனைய பதிவுகள்