ரவிக்குமார் (ஆசிரியர்), தேன்மொழி (துணை ஆசிரியர்). தஞ்சாவூர் 613004: மணற்கேணி, 79, மருத்துவக் கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக் கல்லூரி சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (தமிழ்நாடு: அகரம் அச்சகம், தஞ்சாவூர்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 24.5×18.5 சமீ., ISSN: 2249-9164.
முனைவர் ரவிக்குமார், முனைவர் தேன்மொழி ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ‘மணற்கேணி’ ஆய்விதழ் தமிழகத்தில் வெளிவருகின்றது. 40ஆவது இதழில் செ.வை.சண்முகம், கி.நாச்சிமுத்து, ரா.ராமச்சந்திரன், ரா.ராஜகோபாலன், சி.மீனாட்சி, தேன்மொழி, க.பஞ்சாங்கம், சா.உதயசூரியன், இரா.சம்பத், நா.ஜிதேந்திரன், ரவிக்குமார், க.அய்யனார் ஆகிய தமிழக ஆய்வாளர்களுடன், இலங்கையிலிருந்து செல்லத்துரை சுதர்சனனும் இவ்விதழில் கட்டுரை எழுதியுள்ளார். ‘அமைவு-காரணம், விதி-காரியம்: இ.முருகையனின் மொழி, இலக்கணச் சிந்தனைகள்:அறிமுகமாகச் சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் அவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது.