ரவிக்குமார் (ஆசிரியர்). தஞ்சாவூர் 613004: மணற்கேணி, 79, மருத்துவக் கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக் கல்லூரி சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (தமிழ்நாடு: அகரம் அச்சகம், தஞ்சாவூர்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 24.5×18.5 சமீ., ISSN: 2249-9164.
முனைவர் ரவிக்குமார் அவர்களை ஆசிரியராகக்கொண்டு ‘மணற்கேணி’ ஆய்விதழ் தஞ்சாவூரிலிருந்து வெளிவருகின்றது. 43ஆவது இதழில், ரவிக்குமார், தேன்மொழி, ஏ.சுப்பராயலு, இரா.அறவேந்தன், மா.பரமசிவன், முகம்மது நூறுல் ஹூடா, எல்.இராமமூர்த்தி, சிலம்பு நா.செல்வராசு, சரசுவதி வேணுகோபால், ஆகியோரின் ஆக்கங்களுடன் ஈழத்தவரான மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய ‘கருமுத்து தியாகராசர்: இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர்’என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.