ம.நடராசன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600016: தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, 1வது பதிப்பு, மே 2013. (சிவகாசி 626130: ஸ்ரீநிவாஸ் பைன்ஆர்ட்ஸ் லிமிட்டெட், 340/3, கீழத்திருத்தங்கல்).
840 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 750., அளவு: 24.5×17.5 சமீ.
தஞ்சை-விளார் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நினைவு வெளியீடு -2. இந்நூல் தயாரிப்புக் குழுவில் மணா, மகிழினி சரவணன், மோகன்ராஜ், தனலெட்சுமி, பேராச்சி கண்ணன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். அச்சிடப்பெற்ற நூல்கள், பத்திரிகை/சஞ்சிகைக் கட்டுரைகள், உரைகள் போன்றவையாக வெளிவந்த ஆவணங்களின் பெருந்தொகுப்பு இது. தமிழகத்தில் பெரியார் திடல் நூலகர் கோவிந்தன் அவர்களின் பஙகளிப்புடன் வெளிவந்துள்ளது. முள்ளிவாய்க்கால்-குருதி தோய்ந்த சாட்சியங்கள், இலங்கை-வரலாற்றின் பக்கங்களில் இருந்து, நேர்காணல்கள், நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பதிவுகள், மலையகத் தமிழர்கள், ஊடகப் பதிவுகள், ஜெனீவா மகாநாடு-பிந்தைய நிகழ்வுகள், பின்னிணைப்பு (பிரபாகரன் பொன்மொழிகள்) ஆகிய எட்டுப் பிரிவுகளின்கீழ் இவ்வாக்கங்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.