சிவம் வேலுப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). தமிழ்நாடு: வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் (வழி), உடையார்பாளையம் (வட்டம்), அரியலூர் மாவட்டம், 612 901, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (புதுச்சேரி (பாண்டிச்சேரி): அன்னை அருள் மறுதோன்றி அச்சகம்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-909255-8-7.
முனைவர் மு.இளங்கோவனின் ஐம்பதாம் அகவையின் நிறைவை நினைவுகூரும் வகையில் தமிழக, புகலிடத் தமிழ் அறிஞர்களின் மலரும் நினைவுகளைத் தாங்கிய சிறப்பு மலர் இதுவாகும். முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார். கவிதைத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும், ஆய்வு செய்யவும் திறன் பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். இவரின் பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகமும், பாரதிதாசன் உயராய்வு மையமும், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும் இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன. தொகுப்பாசிரியர் சிவம் வேலுப்பிள்ளை கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.