க.சொர்ணலிங்கம். யாழ்ப்பாணம்: க.சொர்ணலிங்கம், இலங்கை இளம் நடிகர் சங்கம், நவாலி, மானிப்பாய், 1வது பதிப்பு, டிசம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).
(36), 200 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.
ஈழத்து நாடகத்துறையின் தந்தை எனக் கருதப்படும் கலையரசு க.சொர்ணலிங்கம் (30.3.1889-26-7-1982) அவர்கள் ‘ஈழத்தில் நாடகமும் நானும்’ என்ற தலைப்பில் கொழும்பு தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதிய கலைத்துறை வாழ்க்கை வரலாற்றுப்பதிவு நூலுருவில் வெளிவந்துள்ளது. இது ஈழத்தின் நவீன மேடை நாடக வரலாற்றினை எழுத்துருவில் வழங்கிய முதல் நூலாகக் கருதப்படுகின்றது. நடிகர்கள், நாடகங்கள், நாடக ஆசிரியர்கள், மக்களின் வரவேற்பு மற்றும் ரசனை முறைகள் குறித்தெல்லாம் நூல் முழுவதும் பேசப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18988. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5443)