13A06 – காந்தி தரிசனம்.

எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

100 பக்கம், விலை: ரூபா 3.25, அளவு: 19 x 13 சமீ.

காந்தி நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் இதுவும் ஒன்று. 29 உலகத் தலைவர்கள் எவ்வாறு காந்திஜியின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் தரிசித்தார்கள் என்பதைப் படித்தறியும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் விநோபாஜி, ரவீந்திரநாத் தாகூர், ஈன்ஸ்டீன், பேர்ல் பக், ஸ்ரீ அரவிந்தர், எல்.பி.பியர்சன், டபிள்யூ. ஸெய்ஸன்பேர்க், எம்.சொலொக்கொவ், சீ.வீ.ராமன், சங்.பிதா.டொமினிக் பியர், மார்ட்டின் லூதர் கிங், ஊதாண்ட், கேஸி பிரபு, கிளமென்ட் அட்லி, லூயி பிர், ஹெய்லி ஸெலஸ்ஸி, ஜே.ஸி.ஸ்மட்ஸ், ஹரோல்ட் வில்சன், தேவதாஸ் காந்தி, அபுல் கலாம் ஆஸாத், ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, சேர். எம்.ஸ‡ருல்லா கான், டாக்டர் பிரதாப் சந்திர சந்தர், சி.ராஜகோபாலாச் சாரியார், ராஜேந்திர பிரசாத், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், ஸாக்கிர் ஹுசேன், வி.வி.கிரி, சேர். இவான் மக்கே, இந்திரா காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, முல்க்ராஜ் ஆனந்த் ஆகிய பிரமுகர்களின் பார்வையில் இப்பதிவுகள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2899.பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7863)

ஏனைய பதிவுகள்

Happy Casino, Nytta 2022

Content Dragon Born slot recension – Vår Kunskap A Att Prova Tillsammans Free Spins Casino Hurså Kasinon Skänker Kasinobonusar Briljant Svenska språke Casinon Tillsammans Freespins