13A07 – சாவித்திரி.

க.சோமசுந்தரப் புலவர். சுன்னாகம்: வட – இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, டிசம்பர் 1955, 1வது பதிப்பு, 1914, 2வது பதிப்பு, 1954. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xii, 46 பக்கம், விலை: சதம் 75, அளவு: 18.5 x 14.5 சமீ.

மகாபாரதத்தில் வரும் சாவித்திரியின் கதையை இங்கு சிறுவர்களுக்கேற்றவகையில் வசனமரபும் செய்யுள் மரபும் இணைந்து வரும் பாங்கில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றியிருக்கிறார். இந்நூலுக்கான அணிந்துரையை திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிலிருந்து சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியுள்ளார். நூலாசிரியர் வரலாற்றுடன் தொடங்கும் இந்நூல், அசுவபதி ஆட்சி, சாவித்திரி பிறத்தல், கல்வி பயிலுதல், முனிவர் உபதேசம், சத்தியவானைக் காதலித்தல், திருமண நிகழ்ச்சி, சத்தியவான் இறத்தல், காலன் வரங்கொடுத்தல், கணவனுயிர் மீட்டல், எல்லாம் மங்கலமாதல் என 10 அத்தியாயங்களில் சத்தியவான்-சாவித்திரி கதையைக் கூறுகின்றது. இலங்கை வித்தியா பகுதியின் வித்தியா பிரசுர சபை யினரால் இலங்கைப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் உபயோகிக்கத் தகுந்த தென அங்கீகரிக்கப்பட்ட நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4738. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5389).முன்னைய பதிப்பிற்கானநூல்தேட்டம் பதிவிலக்கம் 5389).

ஏனைய பதிவுகள்