13A09 – சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, ஆடி 1912, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை).

182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5 x 12 சமீ.

இவை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்களால் பரிசோதித்து, சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் பொன்னம்பலபிள்ளையால் முதலிரண்டு தொகுதிப் பெயர்ப்பொருளோடு வெளியிடப்பட்டது. 10 பிரிவுகளில் தெய்வப்பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி, விலங்கின் பெயர்த் தொகுதி, மரப் பெயர்த் தொகுதி, இடப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி ஆகியன அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21713).

சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும். மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நல்லூர், 4வது பதிப்பு, 1921, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை).

216 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 12 சமீ.

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பித்த சூடாமணி நிகண்டுவின் இப்பதிப்பு, 10 பிரிவுகளில் தேவப்பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி, விலங்கின் பெயர்த் தொகுதி, மரப் பெயர்த் தொகுதி, இடப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி, ஆகியனவும் இரண்டாம் பகுதியில் ஒருசொற்பல்பொருட் பெயர்தொகுதி, பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி ஆகியனவும் வகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26774. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4255) சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும். மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: விசுவநாதபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 14வது பதிப்பு, மாசி 1926, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை).

216 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 12 சமீ.

இவை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்களால் பரிசோதித்து, சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் விசுவநாதபிள்ளையால் முதலிரண்டு தொகுதிப் பெயர்ப்பொருளோடு வெளியிடப்பட்டது. 10 பிரிவுகளில் தேவப்பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி, விலங்கின் பெயர்த் தொகுதி, மரப் பெயர்த் தொகுதி, இடப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி ஆகியன அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18356).

ஏனைய பதிவுகள்

Dual Spin Slot machine

Articles Vehicle Play Labeled Harbors Could you Actually Earn Money on Online slots games Here are some types of other ports that feature the brand