13A10 – சைவ சமயம்: ஓர் அறிமுகம்.

ப.அருணாசலம். கொழும்பு: அமரர் திருமதி பொன்னுச்சாமி பரமேஸ்வரி அவர்களின் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founders Street).

(12), 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

சைவம் (அறிமுகம், சிவன் திருக்கோலம், நாமம், சிவபரத்துவம், சைவன், சைவ உட்பிரிவுகள்), அடிப்படை நூற்கள் (அறிமுகம், வேதம், ஆகமங்கள், புராண இதிகாசங்கள், திருமுறைகள்ஃசித்தாந்த நூற்கள்), சிவதன்மம் (சிவதன்மம், பதிபுண்ணியம், சரியை-தாசமார்க்கம், கிரியை-சற்புத்திர மார்க்கம், யோகம்- சகமார்க்கம், ஞானம்-சன்மார்க்கம்), சிவவழிபாடு (சிவபூசை, சிவபூசை செய்வோர், தீக்கை, சிவபூசையின் நோக்கம், ஆன்மார்த்த-பரார்த்த பூசைகள், பரார்த்த பூசை, பூசை நிகழ்ச்சிகள், புற வழிபாடு, பஞ்சசுத்தி, உபசாரங்கள்), திருக்கோவில் வழிபாடு (அறிமுகம், வழிபாட்டுத் திருக்கோலங்கள், சிவலிங்கம், நடராசர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சந்திரசேகரர், ஸ்ரீபலி, பைரவர், விநாயகர், முருகன், தேவி வழிபாடு, திருக்கோவில் பூசை, நித்தியபூசை, திருவிழா, சிவாலய தரிசனம்), அடியார் வழிபாடு (அறிமுகம், திருக்கோவிலில் அடியார் வழிபாடு, சமயக் குரவர்கள், தேவார ஆசிரியர்கள் மூவரையும் வழிபட்டு உய்ந்த நாயன்மார்கள்- கணநாதர்ஃஅப்பூதி அடிகள்ஃ சோமாசிறிமாறர்ஃ பெருமிழலைக் குறும்பர் ஆகியோர், சிவகுரு, குருமடம்-திருவாவடுதுறை மடம்ஃதருமபுர மடம்ஃதிருப்பனந்தாள் மடம் ஆகியவை), பொதுவான வழிபாடு, சைவசமயக் குரவர்கள், சித்தாந்தக் கோட்பாடு என ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு 1979இல் வெளிவந்திருந்த நிலையில், குமரன் புத்தக இல்லத்தின் அதிபர் செ.கணேசலிங்கம் அவர்களின் துணைவியார் அமரர் திருமதி மீனாம்பாள் கணேசலிங்கம் அவர்களின் நினைவு மலராக 2004 இல் மீள்பதிப்பாக வெளிவந்திருந்தது. இப்புதிய பதிப்பும் அமரர் திருமதி பொன்னுச்சாமி பரமேஸ்வரி (27.8.1926-15.8.2010) அவர்களின் நினைவு வெளியீடாக வெளிவந்துள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2126).

ஏனைய பதிவுகள்

Casino Freispiele Ohne Einzahlung 2024

Content Starlight Kiss Casino | Mobile Version Von Mr Bet Flappy Casino: 20 Freispiele Ohne Einzahlungsbonus Freispiele Als Teil Eines Willkommensbonus Wie Kann Ich 100